தமிழ் - ஒரு நிமிட 'பயிற்சி வினாக்கள்' பகுதி-1

0

பயிற்சி வினாக்கள் - I

வகுப்பு: 6
பாடம்: தமிழ்
பருவம்: I
அத்தியாயம்: இயல் - 1
தலைப்பு: இன்பத்தமிழ்
வகை: கவிதைப்பேழை
பாடத்திட்டம்: சமச்சீர் கல்வி
பிரிவு: தமிழ்நாடு அரசு
துறை: பள்ளிக் கல்வித்துறை


வினாக்கள்:-

1. பிரித்து எழுதுக.
அ) அமுதென்று -
ஆ) மணமென்று -

2. கோடிட்ட இடத்தை நிரப்புக.
தமிழுக்கும் _______________ பேர் - அந்தத்
தமிழ் _______________ எங்கள் உயிருக்கு நேர். 

3. சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
தமிழ் நிலவென்று பேர் - சமூகத்தின்
தமிழுக்கு இன்பத் விளைவுக்கு நீர்.

4. பாடல் அடியில் அடிக்கோடிட்ட சொற்களின் பொருளை எழுதுக.
தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்.

5. கீழ்காணும் பாடல் அடியில் அடிக்கோடிட்ட சொற்களை எடுத்தெழுதி, எதிர்ச்சொல் எழுதுக.
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்.

6. பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.
அ) உயிருக்கு - வேர்
ஆ) விளைவுக்கு - நீர்
இ) புலவர்க்கு வேல்
ஈ) வயிரத்தின் - தேன்

7. கீழ்காணும் குறிப்புகள் யாரை குறிப்பிடுகின்றன?
சுப்புரத்தினம் - புரட்சிக்கவி - பாவேந்தர்

8. சரியா? தவறா?
அ) தமிழ், தமிழர்களின் உயிருக்கு நேர். 
ஆ) தமிழ், புலவர்களுக்கு வாள் போன்றது.

9. தொடரில் அமைத்து எழுதுக.
அ) அமுது
ஆ) தமிழ்

10. கீழ்காணும் பாடல் அடிகள் உணர்த்தும் பொருளை உங்கள் சொந்த நடையில் எழுதுக.
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்.
 

விடைகள்:-

1. அ) அமுதென்று - அமுது + என்று
    ஆ) மணமென்று - மனம் + என்று

2. தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

3. தமிழுக்கு நிலவென்று பேர் - சமூகத்தின்
தமிழுக்கு இன்பத் விளைவுக்கு நீர்.

4. மணமென்று - வாசனை என்று
    நிருமித்த - உருவாக்கிய

5. இளமைக்கு - முதுமைக்கு
    நல்ல புகழ் - கெட்ட புகழ்

6. பொருந்தாதது: உயிருக்கு - வேர்
    சரியானது: உயிருக்கு நேர்
    பொருந்தாதது: வயிரத்தின் - தேன்
    சரியானது: வயிரத்தின் வாள்
 
7. பாவேந்தர் 'பாரதிதாசன்'.

8. அ) சரி
    ஆ) தவறு; சரியானது: தமிழ், புலவர்களுக்கு 'வேல்' போன்றது.

9. அமுது - தமிழ் மொழிக்கு 'அமுது' என பெயர் என்று பாவேந்தர் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்.
    தமிழ் - 'தமிழ்' மொழியை சிறப்பித்து, இன்பத்தமிழ் கவிதையை எழுதியுள்ளார், பாவேந்தர் பாரதிதாசன்.

10. தமிழ் மொழி எங்கள் உயர்வுக்கு வானம் ஆகும்; இன்பத் தமிழ் மொழி எங்கள் அறிவுக்கு, தோள் ஆகும்.
   

* பிழை / சந்தேகம் இருப்பின், services.mathirajatm@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு, தகவல் தெரிவிக்கவும்.

* நன்றி: தமிழ்நாடு அரசு - பள்ளிக் கல்வித் துறைக்கு...

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top